கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடம்பட்டுத்தாளம் பகுதியைச் சேர்ந்த 36 வயதான வைஷாகன் என்பவர், இரும்புப் பட்டறை ஒன்றை நடத்தி வந்தார். ஏற்கனவே திருமணமான இவர், அந்தத் தகவலை மறைத்து 26 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.
வைஷாகனுக்கு ஏற்கனவே குடும்பம் இருப்பதை அறிந்த அந்தப் பெண், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வைஷாகன், அந்தப் பெண்ணைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தனது பட்டறைக்கு அப்பெண்ணை வரவழைத்த அவர், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி நாடகமாடி, அதைத் தடுக்க வந்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இக்கொலையின் உச்சகட்டமாக, அந்தப் பெண் உயிரிழந்ததை உறுதி செய்த வைஷாகன், அந்த சடலத்துடன் உடலுறவு கொண்டு தனது இச்சையைத் தீர்த்துக் கொண்டுள்ளார். பின்னர், அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டது போல சித்தரிப்பதற்காக சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். அதன்பின்னர், தனது மனைவி மூலமாகவே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கச் செய்து நாடகமாடியுள்ளார்.
எனினும், அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வைஷாகனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பெண்ணைக் கொலை செய்து சடலத்துடன் உடலுறவு கொண்ட கொடூர உண்மையை ஒப்புக்கொண்டார். இந்தக் காமக் கொடூரனை கைது செய்த போலீசார் அவரைச் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…