19 ஆண்டுகளாக நீடித்த கொலை வழக்கு….! AI தொழில்நுட்பத்தால் சிக்கிய கொடூரன்…. 15-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை மாற்றி… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 10, 2026

Spread the love

கடந்த 2007-ஆம் ஆண்டு கேரள மாநிலம் பெரிந்தல்மண்ணாவில் உள்ள மரத்தூள் அறுக்கும் ஆலை மேலாளர் பாலகிருஷ்ணன் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, மரத்தூள் குவியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தார். இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த திலீப் ராஜக் மற்றும் சனிச்சர் பைதா ஆகியோர் போலியான பெயர்களில் பணிபுரிந்து விட்டு, சம்பவத்திற்குப் பின் தலைமறைவாகினர். 19 ஆண்டுகளாகப் போலிஸாரின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பி வந்தனர்.

இந்நிலையில், தேசிய உளவுத் தகவல் அமைப்பின் ‘காந்திவா’ என்ற செயற்கை நுண்ணறிவு தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திலீப் ராஜக்கின் பழைய புகைப்படத்தின் மூலம் அவரது தற்போதைய முதிய தோற்றத்தைக் கணித்து போலிஸார் அசாமில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 15-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை மாற்றி மறைந்து வாழ்ந்த குற்றவாளியை 19 ஆண்டுகள் கழித்து நவீன ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலிஸார் தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.