ஆந்திர மாநிலம் அனந்தபூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறிக் கீழே விழுந்த பயணதியை, அங்குப் பணியில் இருந்த போக்குவரத்துப் பிரிவு கான்ஸ்டபிள் நொடிப் பொழுதில் சாதுரியமாகச் செயல்பட்டு உயிருடன் மீட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 29 அன்று அனந்தபூர் ரயில் நிலையத்தில் பைரவ நகரைச் சேர்ந்த ரவிகுமார் என்பவர், பிளாட்பாரத்தில் இருந்து நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகக் கால்தவறி விழுந்து, ரயிலுக்கும் தண்டவாள இடைவெளிக்கும் இடையே சிக்கி இழுத்துச் செல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு நின்றிருந்த டிராஃபிக் கான்ஸ்டபிள், சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று ரவிகுமாரின் சட்டைக் காலரைப் பிடித்துப் பலமாக வெளியே இழுத்து மீட்டெடுத்தார். மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்ட ரவிகுமார், அந்த கான்ஸ்டபிளின் காலில் விழுந்து கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி, கான்ஸ்டபிளின் துணிச்சலான செயலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சுவாரஸ்யமான வீடியோவில், திருவிழா ஒன்றில் பொதுமக்களுடன் சேர்ந்து 'கிராவிட்டிரான்' எனப்படும் வேகமான சுழலும்…
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில்,…
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் அங்கங்கம்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் நியமனத்தில் சுமார்…
நடிகர் தனுஷ் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், சென்னை ஓஎம்ஆரில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் தனது…