“ரொம்ப நன்றி சார்…” காலில் விழுந்து கண்ணீருடன் நன்றி சொன்ன நபர்…. மரண பிடியில் இருந்து காப்பாற்றிய காவலர்…. வைரலாகும் வீடியோ….!!

By Devi Ramu on ஐப்பசி 4, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் அனந்தபூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறிக் கீழே விழுந்த பயணதியை, அங்குப் பணியில் இருந்த போக்குவரத்துப் பிரிவு கான்ஸ்டபிள் நொடிப் பொழுதில் சாதுரியமாகச் செயல்பட்டு உயிருடன் மீட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 29 அன்று அனந்தபூர் ரயில் நிலையத்தில் பைரவ நகரைச் சேர்ந்த ரவிகுமார் என்பவர், பிளாட்பாரத்தில் இருந்து நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகக் கால்தவறி விழுந்து, ரயிலுக்கும் தண்டவாள இடைவெளிக்கும் இடையே சிக்கி இழுத்துச் செல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

   

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு நின்றிருந்த டிராஃபிக் கான்ஸ்டபிள், சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று ரவிகுமாரின் சட்டைக் காலரைப் பிடித்துப் பலமாக வெளியே இழுத்து மீட்டெடுத்தார். மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்ட ரவிகுமார், அந்த கான்ஸ்டபிளின் காலில் விழுந்து கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி, கான்ஸ்டபிளின் துணிச்சலான செயலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.