கடவுளே… நொடியில் தப்பிய பேர ஆபத்து… என்.எஃப்.எல் போட்டியின் போது… அமெரிக்க ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டரை… உரசிச் சென்ற பட்டாசுகள்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

By Swetha on கார்த்திகை 5, 2026

Spread the love

சியாட்டில் உள்ள ‘லுமென் ஃபீல்டு’ மைதானத்தில் சியாட்டில் சீஹாக்ஸ் மற்றும் சிகாகோ பியர்ஸ் அணிகளுக்கு இடையேயான என்.எஃப்.எல் கால்பந்து போட்டிக்கு முன்னதாக ராணுவ ஹெலிகாப்டர் அருகில் பட்டாசுகள் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் தொடக்கக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க ராணுவத்தின் நான்கு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மைதானத்திற்கு மேல் அணிவகுத்துச் சென்றன. இதில் முதல் மூன்று ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக கடந்த நிலையில், கடைசி ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மைதானத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாகச் சென்றுகொண்டிருந்தபோது, அதற்கு மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் மைதானத்தில் இருந்த சுமார் 70,000 பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த ஆபத்தான நிகழ்வு அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. பட்டாசுகளின் வெடிப்புக்கும் ஹெலிகாப்டரின் வருகைக்கும் இடையே நேரக் கட்டுப்பாடு தவறியதே இந்த விபரீதத்திற்குக் காரணம் என்று பரவலாகப் பேசப்பட்டது.

   

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஹெலிகாப்டருக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும், விமானி எந்தவிதப் பாதிப்புமின்றி தொடர்ந்து தனது பயணத்தைச் செவ்வனே முடித்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், விளையாட்டு மைதானங்களில் நடத்தப்படும் இதுபோன்ற கொண்டாட்டங்களின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு எந்தளவுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தச் சம்பவம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.