அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சிக்குப் பேரிடியாக அக்கட்சியின் மூத்த தலைவரும், சிட்டிங் எம்பியுமான பிரத்யுத் போர்டோலாய் விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். சுமார் பத்து ஆண்டுகால பாஜக ஆட்சியை வீழ்த்தி மீண்டும் அரியணை ஏறத் துடிக்கும் காங்கிரஸுக்கு, தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்தத் பின்னடைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னிலையில் பாஜகவில் இணைந்த போர்டோலாய், காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார்.
அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கனவே அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் பூபன் குமார் போரா பாஜகவில் இணைந்த ஒரு மாதத்திற்குள்ளேயே, தற்போது மற்றொரு முக்கிய முகமான போர்டோலாயும் வெளியேறியிருப்பது காங்கிரஸின் இமேஜை கடுமையாகப் பாதித்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸிற்கு இருந்த 3 எம்பிக்களில் ஒருவரை இப்போது கட்சி இழந்துள்ள நிலையில், இது முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜகவுக்குப் பெரிய அரசியல் பலத்தைத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த விலகலுக்கு உட்கட்சிப் பூசல்களே முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. கௌரவ் கோகோயை முதல்வர் வேட்பாளராகக் காங்கிரஸ் முன்னிலைப்படுத்துவது போர்டோலாய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தேர்தல் அறிக்கை குழுத் தலைவராக இருந்த போர்டோலாய், வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே வெளியேறியதாகப் பிரியங்கா காந்தி வத்ரா சுட்டிக்காட்டியுள்ளார். முக்கிய முடிவுகள் எடுப்பதில் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படுவதே இத்தகைய வெளியேற்றங்களுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 தேர்தலில் 75 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த பாஜக கூட்டணி, இந்த முறையும் அதே முனைப்புடன் களமிறங்கியுள்ளது. 50 இடங்களை மட்டுமே பிடித்த காங்கிரஸ், இந்த முறை கூடுதல் இடங்களைக் கைப்பற்றத் திட்டமிட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் வெளியேறுவது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது. மே 6-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள சூழலில், இந்தத் தலைவர்களின் கட்சித் தாவல் அஸாம் தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…