கொல்கத்தாவிலில் நடந்ததாக கூறப்படும் ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி, பரவலான விவாதத்தைத் தூண்டி வருகிறது. போக்குவரத்து சிக்னலில் ஒரு ஜோடி தங்கள் பைக்கில் அமர்ந்திருக்கும் விதம் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. சிலர் அந்தக் காட்சியை காதல் காட்சி என்றும், அன்பின் உச்சம் என்றும், மற்றவர்கள் இது பொது ஒழுக்கத்தை அப்பட்டமாக அவமதிப்பதாகவும் கூறுகின்றனர்.
ये रील बना कर वायरल होना चाहते हैं,, और उसके के लिए ऐसा करना पड़ता है।pic.twitter.com/Bi0L7jNkHT
— Jafar Khan (@jafarkh70504156) November 1, 2025
இதுபோன்ற அத்துமீறும் ஜோடிகளின் வீடியோ சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இருந்து இதே போன்ற வீடியோக்கள் வைரலாகி, பொது இடங்களில் தம்பதிகளின் நடத்தை குறித்த பொது கருத்து வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை பொது நடத்தை மீதான சமூகத்தின் வரம்புகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
