என்னை மறந்துட்டு வாழ்ந்திருவியா..? செல்போன் நம்பரை பிளாக் செய்த காதலி… வெறி தீர தீர காதலன் செய்த கொடூரம்… அடுத்ததுது நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

By Soundarya on புரட்டாதி 13, 2025

Spread the love

மங்களூர் உடுப்பி பூஜாரி பெட்டு பகுதியில் வசிப்பவர் ரக்ஷிதா (23). இவர் மணிப்பால் பகுதியில் உள்ள ஒரு தனியார்  நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்திக் பூஜாரி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரின் காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். இருப்பினும் ரக்ஷிதா தன்னுடைய காதலில் உறுதியாக இருந்துள்ளார் .அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கார்த்திகேயனை வலியுறுத்தி உள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததால் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து தன்னுடைய பெற்றோரின் அறிவுரையை ரக்ஷிதா கேட்டுள்ளார். அவர் கார்த்திக் உடன் பேசுவதை நிறுத்தி தன்னுடைய செல்போனில் அவருடைய நம்பரையும் பிளாக் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் வழக்கம் போல நேற்று காலையில் ரக்ஷிதா வேலைக்கு புறப்படும் போது பைக்கில் பின் தொடர்ந்து சென்று அவரை வழிமறித்துள்ளார். பிறகு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரக்ஷிதா பலத்த காயம் அடைந்து கீழே சரிந்தவுடன் கார்த்திக் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் ரக்ஷிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் ரக்ஷிதா.

   

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கார்த்திக்கை தேடி வந்த நிலையில் அவர் அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து பிணமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து காவல்துறையினர் கிணற்றில் பிணமாக கடந்த கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். போலீசார் நடத்தி விசாரணையில் போலீசுக்கு பயந்து கார்த்திக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.