அட இது கூட நல்லா இருக்கே!… கனடாவில் மலர்ந்த காதல்… அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த கோவை இளைஞர்… தமிழர் முறைப்படி நடந்த திருமணம்…!

By Divyamayakannan on ஆவணி 29, 2025

Spread the love

தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்துக்  கொண்டார். தமிழ்நாடு கோயம்புத்தூரை சேர்ந்த கௌதம் கனடாவில் படித்து அங்கேயே  ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் பயின்ற கல்லூரியில் வாஷிங்டனை  சேர்ந்த சாரா என்பவரும் படித்து வந்துள்ளார். இருவரும் நண்பராக இருந்து நாளடைவில் காதலர்களாக மாறி உள்ளனர். கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பெற்றோர்களிடம் காதலை பற்றி கூறியுள்ளனர்.

அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்பு இருவரும் கனடாவில் மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். சாரா மற்றும் அவரது பெற்றோரும் தமிழ் கராச்சாரப்படி திருமணம்நடைபெற வேண்டுமென்று விருப்பத்தை கூறியுள்ளனர். அதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலேயே இருவருக்கும் தமிழ் கலாச்சாரபடி திருமணம் நடைபெற்றது. சாராவின் உறவினர்கள் கனடாவிலிருந்து அனைவருமே திருமணத்திற்கு வந்துள்ளனர்.