மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபர் பகுதிக்குட்பட்ட காம்ராஜ் நகரில், திங்கள்கிழமை அதிகாலை 6:30 மணியளவில் அதிவேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர மோதலில் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், காம்ராஜ் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலிஸார் லாரியை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்தனர். இதுகுறித்துப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
