அப்பா… அம்மா… ஒரு நிமிஷம் தானே வெளிய போனேன்… கண்ணிமைக்கும் நேரத்தில் காரை நொறுக்கிய லாரி… சிறுவனின் நெஞ்சை பிளக்கும் கதறல்…!

By Swetha on ஐப்பசி 31, 2026

Spread the love

கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் வாகன நெரிசலில் சிக்கியிருந்தபோது, அவர்களின் மகன் ஜூலியோ இயற்கை உபாதைக்காக காரை விட்டு வெளியேறினான். அவன் இறங்கிய சில நொடிகளிலேயே, பிரேக் பிடித்ததால் வந்த ஒரு லாரி அவர்களின் கார் மீது பலமாக மோதியது. இதில் அவனது பெற்றோர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; அதிர்ஷ்டவசமாக அவனது தம்பி மட்டும் உயிர் பிழைத்தான்.

பெற்றோரை இழந்து அந்தச் சிறுவர்கள் துயரத்தில் தவித்துக் கொண்டிருந்த சில மணி நேரங்களிலேயே, மற்றொரு பெரும் கொடூரம் நிகழ்ந்தது. குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த விபத்தையும் கவனச்சிதறலையும் பயன்படுத்திக் கொண்ட சுயநலவாதிகள் சிலர், அவர்களின் கடைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் திருடிச் சென்றனர்.

   

https://twitter.com/diol2n/status/2116136413800300567/video/1

   

ஒரே நொடியில் பெற்றோர் இருவரையும் இழந்து, அந்தச் சிறுவனின் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. இந்தத் துயரமான சூழ்நிலையில் சிறுவர்களுக்கு ஆதரவாக நிற்பதை விடுத்து, அவர்களின் ஏழ்மையையும் தவிப்பையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பொருட்களைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.