நெல் வயல்வெளியில் சிறிய முள்ளம்பன்றி ஒன்றுடன் ஒரு சிறுமி மிகவும் இயல்பாக நடந்து செல்லும் அழகான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களைக் கவர்ந்து வருகிறது. அந்தச் சிறுமியின் கள்ளமில்லாத அழகும், விலங்கின் மீது அவள் காட்டும் அன்பும், பார்ப்பதற்கு டிஸ்னி கார்ட்டூன் கதைகளில் வரும் இளவரசிகளைப் போல இருப்பதாக இணையவாசிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான நெல் வயல்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருக்கும் தூய்மையான பிணைப்பை அழகாக வெளிப்படுத்துகிறது. பொதுவாக முள்ளம்பன்றிகள் மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லக்கூடியவை. ஆனால், இந்த வீடியோவில் அந்த முள்ளம்பன்றி அச்சமின்றி சிறுமியின் பின்னாடியே தொடர்ந்து நடந்து செல்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
https://www.instagram.com/reel/DaHNqMFB9n2/?utm_source=ig_web_button_share_sheet
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த நெகிழ்ச்சியான வீடியோ, லட்சக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் பெற்று வைரலாகி வருகிறது. பரபரப்பான இந்த காலகட்டத்தில், இயற்கையோடு இணைந்த சிறுமியின் இந்த எளிய மற்றும் தூய்மையான மகிழ்ச்சி பலரது மனதிற்குள் அமைதியையும் புன்னகையையும் வரவழைத்துள்ளது.
