மும்பையின் உயிர்நாடியாகக் கருதப்படும் லோக்கல் ரயிலில், பெண்கள் பெட்டியில் ஏறுவதற்காகப் பயணிகள் முண்டியடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழியும் வேளையில், ரயில் நடைமேடைக்கு வந்து சேரும் முன்பே பெண்கள் உயிரைப் பணயம் வைத்து ஓடும் ரயிலில் ஏற முயற்சிப்பதைக் காண முடிகிறது.
மேலும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும், ஜன்னல் வழியாக பைகளைப் போட்டு இருக்கைகளைப் பிடிக்க முயல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் மும்பை போன்ற மாநகரங்களில் அன்றாடப் பயணிகளின் சவாலான வாழ்க்கையையும், பொதுப் போக்குவரத்து நெரிசலையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
भीड़ के बीच लाल सूट वाली लड़की…
अचानक चलती ट्रेन में लटक गई।
उसके साथ जुड़ी वो छोटी सी बात…
जो देखते ही साँस थम जाती है। pic.twitter.com/sTuUjiuDxg— Mohit Kumar Jha (Sangam) (@Mohitjhasangam) February 28, 2026
“>
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிரும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் இதனை மும்பையின் ‘துடிப்புள்ள வேகம்’ என்று குறிப்பிட்டாலும், பலர் இத்தகைய ஆபத்தான பயண முறையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஒரு இருக்கையைப் பிடிப்பதற்காகத் தங்கள் உயிரையே பணையம் வைப்பது வேதனையளிப்பதாகப் பலரும் பதிவிட்டுள்ளனர்.
இது குறிப்பாக, ரயில் இன்னும் முழுமையாக நிற்காத நிலையில், கதவுகளில் தொங்கியபடி பயணிக்கும் பெண்களின் நிலை பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பையும், போதிய உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
