“அட பாவிங்களா… அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்…” அவங்க சந்தோஷப்படுவாங்கப்பா… கடிதத்தில் கதறிய மாணவி… பின்னணியில் கொடூர உண்மை…!!

By Swetha on ஆடி 21, 2026

Spread the love

வாசவி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஸ்ரேயா என்ற மாணவி, தனது முதலாம் ஆண்டு தேர்வின் போது எதிர்பாராதவிதமாக செல்போனை தேர்வு அறைக்குள் எடுத்துச் சென்றுள்ளார். தான் அறியாமல் தான் அதைக் கொண்டு வந்ததாக அவர் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நிர்வாகமும் பேராசிரியர்களும் அதைக் காதில் வாங்கவில்லை. இதனால் அவர் தேர்வெழுத முடியாமல் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அத்துடன் அந்தப் பிரச்சனை முடிவுக்கு வராமல், இரண்டாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியதிலிருந்தே ஸ்ரேயா ஆசிரியர்களின் தொடர் கெடுபிடிகளுக்கும் கேலிப்பேச்சுகளுக்கும் ஆளானார். “வெட்கமும் மானமும் இல்லை”, “சில ஜென்மங்கள் மாறாது” என்றும், வேறு ஏதேனும் மாணவர் ஆள்மாறாட்டத்தில் மாட்டும் போது “நீ மாட்டுவாய் என்று பார்த்தால் வேறு யாரோ மாட்டிவிட்டார்கள்” என்றும் பேராசிரியர்கள் சுமார் மூன்று மாதங்களாக அவரை அனைவரும் பார்க்கும் வண்ணம் கடுமையாகக் பேசி மனரீதியாக சித்திரவதை செய்துள்ளனர்.

   

இந்தத் தொடர் அவமானங்களையும் மன அழுத்தத்தையும் தாங்க முடியாமல், “அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்.. நான் இறக்கப் போகிறேன்” என்று நெஞ்சை உருக்கும் வகையில் தற்கொலைக்கடிதம் எழுதி வைத்துவிட்டு ஸ்ரேயா தன் உயிரை மாய்த்துக் கொண்டார். தான் இறந்தது கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரிந்தால் அவர்கள் வருத்தப்படாமல் சந்தோஷப்படுவார்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மகளை இழந்து தவிக்கும் பெற்றோர், தன் மகளின் மரணத்திற்கு காரணமான கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.