வேறொரு பெண்ணின் மீது வந்த ஆசை.. தடையாக இருந்த கர்ப்பிணி காதலி.. காதலன் செய்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்..!!

By Divyamayakannan on புரட்டாதி 1, 2025

Spread the love

மகாராஷ்டிரா, ரத்னகிரியைச் சேர்ந்தவர் துர்வாஸ் தர்ஷன், அதே பகுதியை சேர்ந்த பக்தி மாயாகர் (26) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். திடீரென்று அந்தப் பெண் காணாமல் போய்விட்டதால் குடும்பத்தில் உள்ளவர்கள் பல இடங்களில் தேடியும், போலீசில் புகாரும் அளித்துள்ளனர். கடைசியாக தோழியை பார்க்க  சொல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். வழக்கு பதிவுச்  செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தன.

இரண்டு வாரத்துக்கு பிறகு மாயக்கரின் மொபைல் போன் புனே, கண்டாலா என்ற மலைப்பகுதியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் இருந்து துர்வாஸ் தர்சனை பிடித்து விசாரித்தனர். மாயாகரைக் கொலை செய்துப் பள்ளத்தில் உடலை தூக்கி எறிந்ததாக தெரிவித்துள்ளார். மாயக்கரை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்ட இருந்தது மாயாக்கு தெரியவந்தது . அதனால் எங்களுக்கு அடிக்கடி சண்டை வரும் என்றும். மாயாகர்  திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை செய்து வந்ததாகவும். அதனால் கோபத்தின் உச்சத்திற்கு போய் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து உடலை பள்ளத்தில் தூக்கி போட்டதாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.

   

கொலையில் சம்பந்தப்பட்ட துர்வாஸ் தர்சன் மற்றும் இரண்டு நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளத்தில் இருந்து மாயக்கரின் உடலை தேடிக் கண்டுபிடித்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறுவது பெண் கர்ப்பமாக இருந்தும் திருமணம் செய்து சொல்லாமல் அவரை கண்டித்து கொலை செய்துள்ளதாகவும் . தர்ஷன் பீர் பார் மற்றும் ஒயின் ஷாப் நடத்தி வந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர் . காதலனே காதலியை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.