கன்னியாகுமரி மாவட்டம், ராமனாதிச்சன்புதூரில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் உட்பட சுமார் 80 பேர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது, அங்கிருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களும், சுமார் 70 வெளிநாட்டு மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழாவில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் உட்பட மீதமுள்ள70 பேர்மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கன்னியாகுமரி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சொகுசு விடுதிகளில் நடக்கும் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
