BREAKING: சற்றுமுன் ராஜினாமா செய்தார்…. சீமானுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த முக்கிய நிர்வாகி…. பரபரப்பு அறிக்கை..!

By Nanthini on ஆடி 9, 2026

Spread the love

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான முத்துபாண்டி, கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கட்சியில் ஏற்பட்ட ஒருசில சங்கடங்கள் காரணமாக தம்மால் தொடர்ந்து பயணிக்க இயலவில்லை என்று மனவருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், கட்சியை விட்டு விலகினாலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு “என்றும் தம்பியாகவே தொடர்வேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வில் மிக முக்கியப் பங்காற்றிய ஒரு மூத்த நிர்வாகி தற்போது கட்சியிலிருந்து விலகியிருப்பது, அரசியல் வட்டாரத்திலும் அக்கட்சியின் தொண்டர்களிடையேயும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.