ஓபிஎஸ் திமுகவுடன் கைகோர்த்துள்ள நிலையில், அவரது இந்த அரசியல் நகர்வை பெரும்பாலான ஆதரவாளர்கள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக, அவருடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் மீண்டும் அதிமுக நோக்கி படையெடுத்து வருவது ஓபிஎஸ் தரப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், ஓபிஎஸ்-ன் நம்பிக்கைக்குரிய தளபதியாகத் திகழ்ந்த சின்னமனூர் செல்வம், தற்போது கம்பம் அதிமுக வேட்பாளர் ஜக்கையன் முன்னிலையில் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்துள்ளார். சொந்த மாவட்டமான தேனியிலேயே செல்வாக்கு மிக்க நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது, ஓபிஎஸ் தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் உண்டாக்கியுள்ளது.
