பலவீனமாகும் சனி பகவான்…! நிதி உயரும், தொழில் மேம்படும்…. 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்…!!

By Devi Ramu on மார்கழி 14, 2025

Spread the love

நீதி மற்றும் கர்மாவின் கிரகமான சனி பகவான், டிசம்பர் 5ஆம் தேதி முதல் பலவீனமான நிலையில் பயணிக்கிறார். இந்த நிலை 2026 பிப்ரவரி மாதம் வரை 76 நாட்களுக்கு நீடிக்கும். சனியின் இந்த பலவீனமான நிலை, துலாம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசிகளுக்கு அதிகப்படியான அதிர்ஷ்டத்தையும் நேர்மறைப் பலன்களையும் தரப்போகிறது.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு, தொழில் மற்றும் கல்வித்துறையில் முன்னேற்றம் காணப்படும்; புதிய வேலை வாய்ப்புகளும் சம்பள உயர்வும் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறைந்து, வெளிநாடு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் தீர்ந்து, நிதி நிலைமை சீராகும்.

   

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு, செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும். நீண்டநாள் உடல்நலப் பிரச்சினைகள் தீர்ந்து, குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பழைய கடன்கள் அடைக்கப்பட்டு, உடன்பிறந்தவர்கள் மூலம் நிதி உதவி கிடைக்கும்.

   

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்; நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். தேவையற்ற செலவுகள் குறையும். நிலம் மற்றும் நீதிமன்றப் பிரச்சினைகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கி, தொழில் மற்றும் வணிகத்தில் வலுவான வளர்ச்சியுடன் லாபம் அதிகரிக்கும்.