திக்.. திக்..! காட்டுக்குள் நடந்தது என்ன?… நடுவழியில் கடத்தப்பட்ட நர்ஸ்… காட்டுப்பகுதியில் கொடூரக் கொலை… களமிறங்கிய போலீஸ் படை…!!

By Gayathri on ஐப்பசி 19, 2026

Spread the love

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ரஞ்சித்குமாரும், அவரது மனைவியான உத்திராவும் திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையத்தில் தங்கி வசித்து வந்தனர். உத்திரா அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 14 அன்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய உத்திரா மாயமானதால், பல இடங்களில் தேடியும் கிடைக்காத அவரது கணவர் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகிலுள்ள விஜயமங்கலம் காட்டுப்பகுதியில் முட்புதருக்குள் உத்திராவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்காக உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனைவியின் இறப்பைத் தாங்க முடியாத அவரது கணவர் ரஞ்சித்குமார் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டார்.

   

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய வழியில் உத்திராவை மர்ம நபர்கள் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்து உடலைக் காட்டில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.