பெங்களூருவில் தனது மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, காதலியுடன் ரகசியமாகத் தகாத உறவு வைத்திருந்த மென்பொருள் பொறியாளர் ஜெட்ரெலா ஜேக்கப் அரூப் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். வேலை இல்லாமல் இருந்த ஜேக்கப்பிற்கு, அவரது மனைவி தனது வேலையைத் தியாகம் செய்து வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், குழந்தை பிறந்த பிறகு தனது மனைவியைச் சாதி ரீதியாக இழிவாகப் பேசியும், கருச்சிதைவு ஏற்படும் அளவிற்கு உடல் ரீதியாகத் தாக்கியும் ஜேக்கப் சித்திரவதை செய்துள்ளார்.
இதற்கிடையில் மனைவிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த ஜேக்கப், அவருடன் இணைந்து சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோக்களையும் வெளியிட்டு வந்துள்ளார். சந்தேகமடைந்த மனைவி அளித்த புகாரின் பேரில், எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் காதலியுடன் இருந்த ஜேக்கப்பை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்தனர். மனைவியின் சம்பளத்தில் வாழ்ந்துகொண்டு அவருக்கே துரோகம் இழைத்த இந்த பொறியாளர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
