13 கால வாழ்க்கை வெறும் 3 மாதத்தில் காலி…. “கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. மன்னித்து ஏற்ற கணவன்”…. அடுத்த நாளே காத்திருந்த பேரதிர்ச்சி….!

Spread the love

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகாவில் உள்ள குர்லாஹள்ளி கிராமத்தில், இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான மோதலால் ஒரு குடும்பமே சிதைந்து போன சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூலித் தொழிலாளியான முனிராஜூ என்பவருக்கும், சுனிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினரிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில், சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிட்ட சுனிதாவுக்கு அறிமுகமான ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

காதல் மோகத்தால் கண்மண் தெரியாமல் செயல்பட்ட சுனிதா, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது கணவரைத் தவிக்க விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். இதனால் பேரதிர்ச்சியடைந்த முனிராஜூ மற்றும் சுனிதாவின் பெற்றோர், தீவிரமாகத் தேடி அலைந்து அவரை கண்டுபிடித்தனர். சுனிதாவின் பெற்றோர் அவருக்குப் பல அறிவுரைகளைக் கூறி, கணவனுடன் சேர்ந்து வாழுமாறு வலியுறுத்தினர். முனிராஜூவும் பெருந்தன்மையுடன் தனது மனைவியை மன்னித்து மீண்டும் தன்னுடன் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்தார். ஆனால், சுனிதாவின் மனம் மாறவில்லை; பெற்றோர் சென்ற சிறிது நேரத்திலேயே மீண்டும் தனது கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என்று கணவரிடம் பிடிவாதம் பிடித்துள்ளார்.

“கணவன் வேண்டாம்; கள்ளக்காதலன் தான் வேண்டும்” என்று சுனிதா பிடிவாதமாக நின்றதால் முனிராஜூ கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். மன்னித்து ஏற்றுக் கொண்ட பின்பும் மனைவியின் இத்தகைய முடிவால் விரக்தியடைந்த அவர், அனைவரும் தூங்கிய பிறகு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காலையில் முனிராஜூ பிணமாகக் கிடப்பதைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சமூக வலைதள மோகமும், தவறான உறவும் ஒரு உழைப்பாளியின் உயிரைப் பறித்ததோடு, ஒரு குடும்பத்தின் 13 ஆண்டுகால பந்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

8 minutes ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

33 minutes ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

42 minutes ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

1 மணத்தியாலம் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

1 மணத்தியாலம் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

2 மணத்தியாலங்கள் ago