கணவரைப் பிரிந்து பாட்டியின் வீட்டில் வசித்து வந்த அபர்ணா என்ற பெண்ணுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இவர்கள் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்ததை 15 வயது சிறுவனான ரவி நேரில் பார்த்துள்ளான். இந்த விவகாரத்தை இருவரின் குடும்பத்தினரிடமும் கூறிவிடுவேன் என்று அச்சிறுவன் மிரட்டியதால், ஆத்திரமடைந்த அபர்ணாவும் அஜய்யும் சேர்ந்து அவனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்.
அதன்படி, கடந்த மாதம் 24ஆம் தேதி, சில பொய் வாக்குறுதிகளைக் கூறி ரவியை கிராமத்திற்கு வெளியே அவர்கள் வரவழைத்தனர். அங்கு அவர்கள் குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி விஷத்தைக் கலந்து, அச்சிறுவனை வலுக்கட்டாயமாகக் குடிக்க வைத்துள்ளனர். விஷம் கலந்த குளிர்பானத்தைக் குடித்த ரவியின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 25ஆம் தேதி அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், ரவியின் உடல்நிலை மேலும் மோசமடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
