“அம்மா.. என்னால முடியல”!… செல்போனை பிடுங்கி டார்ச்சர்… திருமணமாகி 4 மாதம் … புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நடந்தது என்ன?…!!

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள எச்சூரைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான ராஜேஸ்வரிக்கும், படப்பை அடுத்த அழகூரைச் சேர்ந்த சட்டப் படிப்பு முடித்த தீபக் என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான தொடக்கத்தில் இருவரும் சுமுகமாக வாழ்ந்து வந்த நிலையில், சில வாரங்களிலேயே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த தீபக், அவரது செல்போனைப் பறித்துக் கொண்டு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் துயரத்தை ராஜேஸ்வரி தனது தாயிடம் கூறி அழுதபோதும், குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு பொறுமையாக வாழுமாறு தாயார் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளார்.

இந்தச் சூழலில், கணவன் – மனைவி இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தீபக் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற நிலையில், மனவேதனையில் இருந்த ராஜேஸ்வரி படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது மைத்துனர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை உடனடியாக மீட்டு படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

தகவலறிந்து வந்த சோமங்கலம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால், வரதட்சணைக் கொடுமை அல்லது குடும்பத் தகராறு போன்ற பின்னணிகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

Gayathri

Recent Posts

முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு செக்…! இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை…? தவெக தலைமையின் திடீர் முடிவு…!!

அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த தலைவர்களுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் மீண்டும்…

8 minutes ago

“எனக்குத்தான் பதவியே இல்லையே…” முதல்வர் விஜய் குறித்து சரத்குமார் அளித்த பகீர் பேட்டி… அரசியல் களத்தில் பரபரப்பு…!!

தமிழக பாஜகவில் இணைந்த பிறகு தமக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது குறித்து, "எனக்குத்தான் பாஜகவில் எந்தக் கட்சிப் பதவியும் இல்லையே"…

18 minutes ago

திக்.. திக்..! இவளா ஒரு தாயா?… பயங்கர அலறல் சத்தம்… பூட்டிய கதவு… தாய் செய்த வெறிச்செயல்… நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் கெர்லி பகுதிக்கு உட்பட்ட டான்டியா கிராமத்தில், 28 வயது தாய் ஒருவர் தனது மூன்று…

21 minutes ago

திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு செக்… முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய விவகாரம்… அதிரடியாக பாய்ந்த ஆக்ஷன்….!!

முதல்வர் விஜய்யைத் தரக்குறைவாகப் பேசிய வழக்கில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்குக் காவல்துறை முறைப்படி சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் கடந்த…

29 minutes ago

பெண்ணின் அதிரடி அட்டகாசம்… உதவ வந்தவங்களை இப்படியா திட்டுறது?… சாலையில் ரகளை செய்த அமெரிக்க பெண்… கடைசியில் என்னாச்சு தெரியுமா?…!!

டெல்லி மஹிபால்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-48-ஐ ஒட்டிய சேவைச் சாலையில், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர்…

34 minutes ago

“உன்னை உயிரோடு விடமாட்டோம்!”… லாட்ஜ் ஊழியருக்கு கொலை மிரட்டல்… நள்ளிரவில் வெடித்த பயங்கர மோதல்… பதறவைக்கும் பின்னணி…!!

புத்தூரில் உள்ள ஒரு விடுதியில் அக்டோபர் 17 அன்று இரவு பணியில் இருந்த 27 வயதான முகமது ரிஃபாய் என்ற…

45 minutes ago