ஆடியோ லான்ச் ரத்து..! பிரபல மாலில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள LEO pre release event…! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!

By Begam on ஐப்பசி 6, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியுடன் நடிகை திரிஷா நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படம், ‘லியோ’. இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

   

இத்திரைப்படம்  வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 5 ஆம்  தேதியான நேற்று லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுவதாக கூறப்பட்டிருந்தது. அதன்படி லியோ திரைப்படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கிறது. ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு கோடி பார்வையாளர்கள் இந்த படத்தின் டிரைலரை பார்த்திருந்தார்கள்.

   

 

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது லியோ திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியை துபாயில் வரும் அக்டோபர் 12ஆம் தேதி நடந்த பட குழு திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தற்பொழுது தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த அறிவிப்பு…