திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பாபநாசம் உத்தானி மெயின் ரோட்டைச் சேர்ந்த கலைச்செல்வி (60) என்ற மூதாட்டி, கடந்த சனிக்கிழமை இரவு மர்ம நபியால் தலையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாள் மாலைதான் இந்தச் சம்பவம் வெளியாகி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தக் கொடூரக் கொலை குறித்து வலங்கைமான் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணிபுரியும் அறிவுமணி (28) என்பவர், போலீசாருக்கு உதவிகரமாக உடன் நின்று நாடகமாடியுள்ளார்; அவரது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளால் பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர்தான் கலைச்செல்வியைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டார்.
அறிவுமணி ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடுமையான கடன் சுமையில் தவித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடனை அடைக்கும் வழியறியாமல் தனியாக வசித்து வந்த மூதாட்டியைத் திட்டமிட்டு கொலை செய்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்; இந்தச் சம்பவம் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…