வேத ஜோதிடத்தின்படி, செல்வம், அறிவு மற்றும் செழிப்பைக் கொடுக்கும் குரு பகவான், தற்போது தனது உச்ச ராசியான கடகத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தின் 3ஆம் பாதத்தில் பயணித்து வருகிறார்.
வருகிற அக்டோபர் 8-ஆம் தேதி, குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சி காரணமாக ரிஷபம், கடகம் மற்றும் மகரம் ஆகிய 3 ராசிகளுக்குப் பண புழக்கம் அதிகரித்தல், புதிய வேலை வாய்ப்புகள் அமைதல், தொழிலில் லாபம் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல்வேறு சுப பலன்கள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணிகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, சமூகத்திலும் பணியிடத்திலும் மதிப்பும் மரியாதையும் உயரும் காலக்கட்டமாக இது அமையும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
