நேபாளத்தின் தெருக்களில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் ஒன்று எவ்வித அச்சமுமின்றி உலா வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்நாட்டின் புகழ்பெற்ற சித்வான் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள சௌராஹா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் பொதுவாக காண்டாமிருகங்கள் காடுகளுக்குள் மட்டுமே காணப்படும் நிலையில், சுமார் 2,000 கிலோ எடை கொண்ட இந்த பிரம்மாண்ட விலங்கு மக்கள் நடமாட்டம் உள்ள சாலைகளில் சாதாரணமாக நடந்து சென்றது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான டான் கூப்பர் என்பவர் இந்த அரிய காட்சியைத் தனது கேமராவில் படம்பிடித்துள்ளார்.
View this post on Instagram
“>
இந்நிலையில் காண்டாமிருகம் தெருவில் வருவதைக் கண்ட மக்கள் மற்றும் வாகனங்கள் அப்படியே திகைத்து நின்றுவிட்டனர். இருப்பினும், அந்த விலங்கு எவ்வித ஆக்ரோஷமும் காட்டாமல் தனது போக்கிலேயே அமைதியாகச் சென்றது. சிலர் பயமின்றி அதன் அருகே சென்று செல்பி எடுத்தும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதனால் நேபாளத்தில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவை உணவு தேடியோ அல்லது வழிதவறியோ அவ்வப்போது மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வனவிலங்குகள் இவ்வாறு ஊருக்குள் நுழையும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
