யாரு சாமி நீ.! 200 ஐபோன்களை இலவசமாக அள்ளி வழங்கிய ஜெர்மன் இளைஞர்.. என்ன காரணம்..? – வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on மாசி 9, 2026

Spread the love

ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல உள்ளடக்க படைப்பாளரான (Content Creator) யூனஸ் சரோ, சமீபத்தில் துபாயின் தேய்ரா (Deira) பகுதியில் உள்ள தங்கச் சந்தையில் (Gold Souq) பொதுமக்களுக்கு சுமார் 200 ஐபோன்களை இலவசமாக வழங்கி அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். பெட்டி பெட்டியாக ஐபோன்களை அவர் விநியோகித்ததைக் கண்டு அந்தப் பகுதியில் பெரும் கூட்டம் திரண்டது. இந்தத் திடீர் ஆச்சரியத்தால் அந்த இடமே ஒரு கொண்டாட்டக் களம் போல மாறியது.

இந்த நிகழ்வின் வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன. துபாயின் துடிப்பான கலாச்சாரம் மற்றும் படைப்பாளர்களின் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தும் விதமாக இந்தச் செயல் அமைந்துள்ளதாகப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. யூனஸ் சரோ ஏற்கனவே தனது விசித்திரமான மற்றும் ஆச்சரியமான கிவ்-அவே (Giveaway) வீடியோக்களுக்குப் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.