மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 21, 2026

Spread the love

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டைகள் மற்றும் குழாய்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த அவர் மூன்று நாட்களாக மருத்துவமனையில் உணர்வற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக உமர் ஜைத் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.