கர்நாடகாவில் உள்ள துமகூரு தாலுகா, பெலத்தாரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சிம்ரா சனோபர், 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி சிம்ரா சனோபர் என்ற மாணவி பிரதமர் நரேந்திர மோடிக்கும் , முதல்வர் சித்தராமையாவுக்கும் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அக்கடிதத்தில் நான் படிக்கும் பள்ளியில் மதில் சுவர் மற்றும் மைதானம் கட்டித் தரக்கோரி எழுதியுள்ளார். அதனால் துமகூரு மாவட்ட சட்ட சேவைகள் ஆணையச் செயலாளரும் , மூத்த சிவில் நீதிபதி நூருன்னிசா அப்பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போதுதான் தெரியவந்தது மாணவி சிம்ரா பல நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்று. அதனால் சிம்ராவின் வீட்டிற்கு நீதிபதி நூருன்னிசா சென்று மாணவிடம் பேசினார். நீதிபதி மாணவியிடம் கேட்டபோது மாணவி எங்கள் பள்ளிக்கு அருகில் ஒரு திருமண மண்டபம் உள்ளது பள்ளியில் தடுப்புச் சுவர் இல்லாததால் திருமணத்திற்கு வரும் அனைவரும் பள்ளிக்குள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றன என்று கூறியுள்ளார். விளையாட மைதானம் வேண்டும். பள்ளி வளாகத்தில் பலரும் வந்து புகை பிடிக்கின்றனர் மற்றும் சிறுநீர் கழிக்கின்றனர் எங்கள் பள்ளியில் ஒரு பாதுகாப்பு சூழலே இல்லை என்று மாணவி நீதிபதி நூருன்னிசாவிடம் கூறியுள்ளார்.
மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு வட்டார கல்வி அலுவலகத்திற்கு அறிவுறுத்திவுள்ளார். மேலும் சிம்ரா மாணவி நீதிபதியிடம் நீங்கள் சுற்றுச் சுவர் மற்றும் விளையாட்டு மைதானம் கட்டித் தரும் வரை நான் பள்ளிக்கு போக மாட்டேன் என்று பிடிவாதமாக கூறியுள்ளார். இந்தச் சிறுமியின் செயல் மிகவும் ஆச்சரியத்திற்கு உரியது.
