புனே நகரின் பிம்பிள் நிலக் பகுதியில், நடைபாதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த நபர்களை, அங்கிருந்த வெளிநாட்டவர் ஒருவர் துணிச்சலாகத் தடுத்து நிறுத்தியுள்ளார். நடைபாதையில் குறுக்கே நின்று அவர்களை மறித்த அவர், இது பாதசாரிகளுக்கான இடம் என்றும், விதிகளை மதித்து பிரதான சாலையில் செல்லுமாறும் அறிவுறுத்தினார்.
இந்தியர்களிடம் நிலவும் போக்குவரத்து ஒழுக்கமின்மையையும், பொது இடங்களை முறையாகப் பயன்படுத்தத் தெரியாத நிலையையும் இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, இந்தியர்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
In a unique incident in Pimpri-Chinchwad, foreign nationals were seen stopping two-wheeler riders who were using the footpath and urging them to follow traffic rules. The incident took place at Rakshak Chowk in the Pimple Nilakh area, drawing attention to the importance of road… pic.twitter.com/Troq2NXxbH
— Pune Mirror (@ThePuneMirror) December 18, 2025
சொந்த நாட்டுச் சாலை விதிகளையும், சமூகப் பொறுப்பையும் ஒரு வெளிநாட்டவர் வந்து நமக்குக் கற்றுக் கொடுக்கும் அவலநிலையை எண்ணிப் பலரும் சமூக வலைத்தளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பாடப்புத்தகங்களில் சமூக நாகரிகம் குறித்த கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும், பிறரை மதிக்கத் தெரியாத இத்தகைய விதிமீறல்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் நெட்டிசன்கள் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.
