நடுக்கடலில் சரக்கு கப்பலில் மளமளவென பற்றியெரியும் தீ… திடீர் விபத்தால் பரபரப்பு..!!

By Soundarya on புரட்டாதி 22, 2025

Spread the love

குஜராத்தில் உள்ள போர்பந்தர் சுபாஷ்நகர் ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த ஒரு கப்பலில் இன்று தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு  மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததன் மூலம் தீயை அணைக்கும் பணி தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜாம்நகரை தளமாகக் கொண்ட HRM & Sons நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பலில் அரிசி அளவு அதிகமாக இருந்ததால் தீ மிகவும் மோசமாகி கடலின் நடுப்பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது. அந்தக் கப்பல் சோமாலியாவின் போசாசோவுக்குச் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.