அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை டைரக்ட் செய்கிறார். வருகிற ஜனவரி இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது. இன்னும் படப்பிடிப்பே துவங்காத நிலையில் இந்த படத்தை ரூ. 50 கோடிக்கு வாங்கிக்கொள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் கமிட் செய்துள்ளது. மேலும் சாய் அபயங்கர் படத்துக்கு இசை என்பதால் ஆடியோ ரைட்ஸ் ரூ. 12 கோடிக்கும், வெளிநாடுகளில் படத்தை திரையிடும் உரிமம் ஓவர்சீஸ் ரூ. 12 கோடிக்கும் வியாபாரம் நடந்துள்ளது. ஏறக்குறைய 75 கோடி ரூபாய்க்கு இப்போதே படம் வியாபாரம் உறுதியாகி விட்டது.
இந்நிலையில் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் சம்பளம் ரூ. 65 கோடி நடிகை சாய்பல்லவி சம்பளம் ரூ.7 கோடி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சம்பளம் ரூ. 10 கோடி என முடிவாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டியும் நடிக்க உள்ளார். அவரது சம்பளம் ரூ. 15 கோடி என இதுவரை 100 கோடி ரூபாயை சம்பளமே தொட்டு விட்டது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
