சமீபத்தில் வெளியான மிகப்பெரிய படங்கள் கோட் மற்றும் வேட்டையன். விஜய் நடிப்பில் வெளியான கோட் நல்ல விமர்சனங்களை பெற்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், அஜ்மல், பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் கேப்டன் விஜயகாந்த் அவர்களை திரும்ப கொண்டு வந்திருந்தனர்.
அடுத்ததாக ரஜினிகாந்த அவர்கள் நடிப்பில் கடந்த அக்டோபர் பத்தாம் தேதி வெளியான திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் மஞ்சுவாரியாருடன் இருக்கும் டூயட் பாடலான மனசிலாயோ மாபெரும் ஹிட் ஆனது.
இந்த படத்தை பல திரை பிரபலங்கள் தியேட்டரில் வந்து கண்டு ரசித்தனர். தனுஷ் அனிருத் ஆகியோர் மிகுந்த கூட்டத்திற்கு நடுவே ரோகினி தியேட்டரில் வந்து படத்தை பார்த்துட்டு சென்றனர். இந்நிலையில் படம் வெளியான அன்று நடிகர் விஜய் தியேட்டரில் வந்து வேட்டையன் படத்தை பார்த்துவிட்டு சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஒரு வீடியோவும் வெளியானது. அதில் முகமூடி போல் கேப்பையும் கர்சிப்பையும் அணிந்து கொண்டு ஒரு நபர் குனிந்து கொண்டே வந்து காரில் எறியது போல் அந்த வீடியோ இருந்தது. அது விஜய் தான் என்று இணையவாசிகள் கூறிவந்தனர்.

#image_title
அதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இணையத்திலேயே சண்டையிட்டுக் கொண்டு இருந்தனர். இவர் படம் தான் பெருசு என்பது போல் விவாதம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த வெங்கட் பிரபு அவர்களிடம் வேட்டையன் படம் பார்த்தீர்களா விஜய் அவர்கள் பார்த்தார்களா என்று கேட்டனர். அதற்கு நாங்கள் எல்லாருமே வேட்டையன் படம் பார்த்தோம் ரொம்ப சூப்பரா இருந்தது என்ஜாய் பண்ணினோம் எல்லாருமே தலைவரோட ரசிகர்கள் தான் என்று ஒரே வார்த்தையில் ரசிகர்கள் பிரச்சனைகளை முடித்துவிட்டார் வெங்கட் பிரபு.