கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் அருகே, ஐந்து ஆண்டுகள் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி மணம் முடித்த தம்பதிக்குள் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடராயனகோட்டை கிராமத்தைச் சேர்ந்த முனிந்திரா மற்றும் வர்ஷா ஆகிய இருவரும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நிலையில், வர்ஷா அடிக்கடி கணவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த முனிந்திராவின் அந்தரங்க உறுப்பில் வர்ஷா ஆவேசமாக மிதித்ததில், அவர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவரைப் பார்க்க வர்ஷா சென்றபோது, முனிந்திராவின் உறவினர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வர்ஷா, மருத்துவமனைக்கு வெளியேயே விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். தற்போது கணவன் மற்றும் மனைவி இருவருமே ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து கரம் பிடித்தும், புரிதல் இல்லாத கோபத்தால் ஒரு குடும்பம் சிதைந்துள்ள இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…