ஐயோ… காப்பாத்துங்க… காலை நடைப்பயிற்சியில் முதியவரைத்… தூக்கி வீசிய கொடூரக் காளை… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

By Swetha on ஐப்பசி 16, 2026

Spread the love

மத்தியப் பிரதேசத்தின் மண்டலா பகுதியில் உள்ள இந்திராஜி வார்டு புத்வாரி சௌக்கில் காலை நடைப்பயிற்சியின் போது முதியவர் ஒருவர் மீது ஆக்ரோஷமான காளை ஒன்று திடீரெனத் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததுடன், தற்போது அந்த அதிர்ச்சியூட்டும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

காலை நேரத்தில் வழக்கம்போல நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த அந்த முதியவரை நோக்கி திடீரெனப் பாய்ந்து வந்த காளை அவரைத் தூக்கி வீசியதுடன் கடுமையாகத் தாக்கியது. அங்கு உடனிருந்தவர்கள் ஆபத்தான சூழ்நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, காளையை விரட்டியடிக்க முயன்றனர்.

   

https://twitter.com/nextminutenews7/status/2110707393365737759/video/1

   

இந்தத் திடீர் தாக்குதலில் பலத்த காயமடைந்த முதியவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே தெருக்கால்நடைகள் மற்றும் கட்டுப்பாடற்ற காளைகளின் தொல்லை குறித்த அச்சத்தையும் பாதுகாப்புக் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.