அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரின் புறநகர் பகுதியான மவுண்ட் லெபனானில் ஒரு நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 42 வயதான பேட்ரிக் லென்ச் என்ற நபர், அங்குள்ள நகராட்சி அலுவலக கட்டிடத்தின் பின்னால் உள்ள 5 அடுக்கு பொது வாகன நிறுத்துமிடத்தின் மேல் தளத்திலிருந்து தனது இரண்டு குழந்தைகளை கீழே தூக்கி வீசியுள்ளார். பின்னர் அவரும் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்தக் கொடூர சம்பவத்தில் 8 வயது சிறுவன் ஜேம்ஸ் லென்ச் மற்றும் 6 வயது சிறுமி கரோலின் லென்ச் ஆகிய இரு குழந்தைகளும் அவர்களது தந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த முதலுதவி மீட்புக் குழுவினர், சாலையில் அசைவற்று கிடந்த அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க முயன்றும் பலனின்றி மூவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
https://twitter.com/nextminutenews7/status/2119003266088591789/video/1
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இது ஒரு திட்டமிட்ட படுகொலை மற்றும் தற்கொலை வழக்கு என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வேலை இழந்ததால் அந்தத் தந்தை கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதற்காக அவர் மனநல மருத்துவரைச் சந்திக்கவிருந்த நாளுக்கு முந்தைய தினமே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் அவரது மனைவி சமூக ஊடகத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இக்கோர விபத்தால் ஒட்டுமொத்த மவுண்ட் லெபனான் சமூகமும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது.
