“உன் பக்கத்தில தான் இருக்கேன்.. நீ பயப்படாம தூங்கு” மகளின் கல்லறை பக்கத்தில் உறங்கும் தந்தை… நெஞ்சை உலுக்கும் உருக்கமான சம்பவம்..!!

By Soundarya on மாசி 16, 2026

Spread the love

“எப்பொழுதும் உன் பக்கத்தில் நான் இருக்கிறேன், நீ பயப்படாமல் தூங்கு” என்ற உருக்கமான வரிகளுடன் பங்களாதேஷில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் காண்போர் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. 19 வயதான தஹ்மிமா, சிறுவயது முதலே பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்டு, 2018-ல் அறுவை சிகிச்சை செய்திருந்த போதிலும், டிசம்பர் 20, 2025 அன்று மாரடைப்பால் காலமானார். தன் மகள் தனியாக இருக்க அஞ்சுவாள் என்று கருதிய அந்தத் தந்தை, மகளின் கல்லறைக்கு அருகிலேயே படுத்து உறங்கி மௌனமாக அஞ்சலி செலுத்தி வருவது தந்தை பாசத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நெகிழ்ச்சியான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி, “பெற்றோரின் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை” என்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. தஹ்மிமாவின் மறைவு ஒரு பேரிழப்பாக இருந்தாலும், அந்தத் தந்தையின் செயல் ஒரு தந்தை தன் மகளின் மீது வைத்திருக்கும் மாறாத அன்பையும் பாதுகாப்பையும் வெளிப்படுத்துகிறது. மரணத்திற்குப் பின்னும் தொடரும் இந்த பாசம், இணையவாசிகள் பலரையும் நெகிழச் செய்துள்ளது.