
CINEMA
தன் மகளை ரோட்டில் சுமந்து செல்லும் அப்பா… ‘இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே… எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி’… வைரல் வீடியோ…
ஒரு குடும்பத்தில் எல்லா அப்பாக்களுக்கும் தன்மகள் குட்டி இளவரசியே. எல்லா மகள்களுக்கும் தன் அப்பா ஹீரோதான். ஒவ்வொரு மகளும் தன்னுடன் கடைசி வரை இருக்க வேண்டும் என்றும் விரும்பும் ஒரு உறவு அப்பா. அப்பாவின் மறைவு அவரது மகளுக்கு ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று கூறலாம்.
ஒரு மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஒரு உறவு மட்டுமல்ல. அவர் தோழனாக, ஹீரோவாக, காவலனாக பல எண்ணற்ற கதாபாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர். அப்பா மகளின் பாசத்திற்கு ஈடு இணையே கிடையாது. அப்பா மகளின் மீது வைத்திருக்கும் பாசமும் சரி, மகள் தனது தந்தையின் மீது வைத்திருக்கும் பாசமும் சரி. அதற்கு அளவுகோலே கிடையாது.
பொதுவாகவே அம்மாக்களுக்கு மகன்களை பிடிப்பதும் ,அப்பாக்களுக்கு மகள்களை பிடிப்பதும் ஒரு குடும்பத்தில் இயற்கையாக நடக்கக்கூடியதே. ‘மகளை பெற்ற தந்தைக்கு மட்டுமே தெரியும். மகள் தனது அன்னையின் மறுபிறவி என்று’ இதுபோல பல கவிதைகள் தந்தை மகள் பாசத்தை குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இவர்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல வீடியோக்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது ஒரு தந்தை தனது மகளை தோளில் சுமந்தவாறு ரோட்டில் நடந்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்’ என்ற பாடலின் வரிகள் கண் முன் தெரிவது போல இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ….
View this post on Instagram