நடிகர் அஜித் குமார் இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற ‘லீ மான்ஸ்’ கார் பந்தயத்தில் பங்கேற்றபோது, அவரிடம் அனுமதி இன்றி செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரை அவர் கடுமையாக முறைத்துப் பார்த்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, “ரசிகர்கள் இல்லையென்றால் நடிகர்கள் இல்லை” எனக் கூறி சில நெட்டிசன்கள் அஜித்தின் இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேவேளையில், பொது இடங்களில் முறையான அனுமதி இல்லாமல் திடீரென செல்ஃபி எடுக்க வருவதை அஜித் எப்போதும் விரும்புவதில்லை என்றும், மற்ற நேரங்களில் ரசிகர்களுக்கு உரிய மரியாதை அளித்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்பவர் தான் அஜித் என்றும் அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பந்தய நிகழ்வில், விஜய்யும் அஜித்தும் நேரில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களும் கார் ரேஸ் உடையில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட காட்சிகளும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்சமயம் முழு கவனத்தையும் கார் ரேஸிங்கில் செலுத்தி வரும் அஜித், பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்ற ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு, தனது அடுத்தக்கட்ட சினிமாப் பயணத்திற்கும் தயாராகி வருகிறார்.
https://www.instagram.com/reel/DdOC–5tjwg/?utm_source=ig_web_button_share_sheet
அஜித் குமார் தனது 64-வது திரைப்படமான ‘டேர் டெவில்’ படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
