சினிமாவில் வாய்ப்புத்தேடி அலைந்த பிரபல காமெடி நடிகர்…அவருக்கு உதவி செய்த விஷ்ணு விஷால்…மனம் திறந்த காமெடி நடிகர்…இந்த மனசு எத்தனை பேருக்கு வரும்?…

By Begam

Published on:

சினிமாவில் வாய்ப்புத்தேடி அலைந்த பிரபல காமெடி நடிகர் முனிஷ்காந்த்க்கு நடிகர் விஷ்ணுவிஷால் உதவியதாக தற்பொழுது அவரே குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸ் என்கிற பெயரோடு கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் விக்னேஷ் நடித்த ‘ஈசா’ படத்தில் துணை நடிகராக அறிமுகமானவர் நடிகர் முனிஷ்காந்த். தன்னுடைய வித்தியாசமான காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர். இதைத்தொடர்ந்து அவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘மாநகரம்’, ‘பசங்க 2’ உட்பட பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

   

தற்பொழுது அவர் சினிமாவில் ஆரம்பத்தில் தான் பட்ட கஷ்டங்களை பற்றி மனம் திறந்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. திறமையும் அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டுமே சினிமாவிற்குள் நுழைய முடியும்.  தற்போது முன்னணி காமெடி நடிகராக மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர் ஒரு காலகட்டத்தில் அதிகமாக கஷ்டப்பட்டுள்ளார்.

பட வாய்ப்புக்காக வேண்டி தெரு தெருவாக எல்லா தயாரிப்பாளர்களின் ஆபிஸ்க்கு லோ லோனு என்று அலைந்துள்ளார். அதன் பிறகு காதல் கிறுக்கன், தம்பிக்கோட்டை, ஆழ்வார் மற்றும் காளை போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனது திறமையினை நிரூபிக்க சரியான வாய்ப்புக்காக காத்து கொண்டிருந்த அவருக்கு  நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ‘முண்டாசுப்பட்டி’ படம் தான் மக்களிடம் பிரபலத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தற்போது முன்னணி காமெடி நடிகர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார்.இந்தநிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனக்கு உதவியது குறித்து மனம் திறந்துள்ளார் நடிகர் முனீஷ்காந்த்.