“அந்த மனசு தான் சார் கடவுள்” விபத்தில் சிக்கி படுத்தபடுக்கையான பிரபல நடிகை… ஓடோடி வந்து உதவிய விஜய் ஆண்டனி..!!

By Soundarya on மார்கழி 11, 2025

Spread the love

நடிகை அருந்ததி நாயர் 2024 மார்ச் 14 அன்று திருவனந்தபுரம் கோவளம் புறவழிச்சாலையில் தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. விபத்துக்குப் பிறகு சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.  இந்த விபத்தில் அருந்ததி நாயருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், விலா எலும்புகள் மற்றும் கழுத்து எலும்பில் முறிவுகள் ஏற்பட்டுள்ளன, மேலும் மண்ணீரலில் இரத்தக் கட்டிகளும் இருந்துள்ளன. அவர் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது சகோதரி அருந்ததியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறியிருந்தார். குடும்பத்தினர் நடுத்தர வருவாய் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிகிச்சைக்கான பெரும் செலவை ஏற்க முடியாமல் நிதி உதவி கோரினர். இதனையடுத்து அருந்ததி நாயர் விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட திரைத்துறையினர் அவரது சிகிச்சைக்கு உதவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சைக்கு ₹40 லட்சம் வரை செலவான நிலையில், நன்கொடைகள் மூலம் நிதி திரட்டப்பட்டது.