யார் சாமி நீ… ரூ 46 லட்சம் சம்பளம்… அமேசான் வேலையை உதறி தள்ளிட்டு… ராணுவத்தில் குதித்த மாஸ் இளைஞர்… மனதை நெகிழ வாய்த்த சம்பவம்…!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 27 வயதான ஷர்தேந்து திவாரி, பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். முன்னணி பன்னாட்டு நிறுவனமான அமேசானில் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயரிய ஊதியத்தில் பணியாற்றி வந்த இவர், நாட்டின் மீது கொண்ட பற்றினால் அந்த சொகுசு வேலையைத் துறந்து இந்திய ராணுவத்தில் இணைந்துள்ளார்.

இவரது தந்தை ராஜ்குமார் திவாரி 36 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி கௌரவ கேப்டனாக ஓய்வு பெற்றவர் என்பதால், குடும்பப் பாரம்பரியம் இவருக்கு முக்கிய தூண்டுகோலாக அமைந்தது. அதோடு மட்டுமல்லாமல் சாகசம், தலைமைத்துவம் மற்றும் களப்பணி ஆகியவற்றின் மீது கொண்ட ஈர்ப்பால், 8 முறை முயன்று தொழில்நுட்பப் பாதை வழியாக ராணுவத்தில் சேரும் தனது இலக்கை அடைந்துள்ளார்.

கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சியின் போது, இவரது சிறந்த தலைமைப் பண்புகளை அங்கீகரிக்கும் வகையில் அகாடமியின் மிக உயர்ந்த கேடட் பதவிகளில் ஒன்றான சீனியர் அண்டர் ஆபீசராக தேர்வு செய்யப்பட்டார். ரூ. 46 லட்சம் சம்பளத்தை விட நாட்டின் சேவையே பெரிது என நிரூபித்துள்ள இவரின் இச்செயல் பல இளைஞர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.

Swetha

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

6 minutes ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

9 minutes ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

12 minutes ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

14 minutes ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

19 minutes ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

20 minutes ago