தொப்பையை அடியோடு குறைக்கனுமா…! அப்போ மதிய உணவுக்கு முன் இதை மட்டும் குடிங்க… பிரபல ஊட்டச்சத்து நிபுணர் வெளியிட்ட மேஜிக் பானம்…!!

By Devi Ramu on புரட்டாதி 27, 2026

Spread the love

உடலின் அழகைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களுக்கும் முக்கிய காரணமாக இருக்கும் தொப்பை மற்றும் அதிகப்படியான உடல் எடையைக் குறைக்கப் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் மன்பிரீத் கல்ரா எளிய இயற்கை பானம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பை வேகமாகக் கரைக்க இந்த பானம் பெரிதும் உதவுகிறது.

வெந்தயம், சோம்பு, சுக்கு, பட்டை மற்றும் கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்தப் பொடி, கொழுப்பு திசுக்களில் இருக்கும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. வெந்தயம் மற்றும் சோம்பில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் இயற்கை கலவைகள் பசியைக் கட்டுப்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைச் சீராக வைக்கிறது. மேலும், இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தி இன்சுலின் உணர்திறனை ஆதரிக்கிறது.

   

இந்தப் பொடியைத் தயாரிக்க வெந்தயப் பொடி, சோம்புப் பொடி, சுக்குப் பொடி, பட்டை மற்றும் கல் உப்பு ஆகியவற்றை அரைத்து வைத்துக்கொண்டு, தினமும் மதிய உணவுக்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் கலந்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துப் பருக வேண்டும். இந்த பானத்தை அருந்துவதோடு, தினமும் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றி வந்தால், தொப்பை குறைவதோடு, இரத்த அழுத்தம் சீராகி உடல் முற்றிலும் தூய்மையடையும் என்று நிபுணர் உறுதியளித்துள்ளார்.