வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரும் வழக்கறிஞருமான கதிரவனுக்கும் (40), செண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நட்சத்திரா (35) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. நட்சத்திராவிடம் பழகுவதைக் கதிரவன் தவிர்த்துவிட்டு, வேறொரு பெண்ணுடன் பழகியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நட்சத்திரா, தனது அக்கா அமுதா மற்றும் அவரது மகள்கள் பிரபாவதி, லட்சுமி ஆகியோருடன் கதிரவனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு கதிரவனுக்கும் அந்த நான்கு பெண்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது நிலைதடுமாறிக் கீழே விழுந்த கதிரவன் பலத்த காயமடைந்து மயக்கமடைந்துள்ளார். உடனே அவரை மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கதிரவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திரா, அமுதா, பிரபாவதி, லட்சுமி ஆகிய நான்கு பெண்களையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…