என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

By Swetha on கார்த்திகை 6, 2026

Spread the love

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்களும், முன்னணி சினிமா பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். குறிப்பாக, பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த திருமண விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய், நடிகை த்ரிஷா மற்றும் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விழாவிற்கு விஜய்யும் த்ரிஷாவும் இணைந்து வருகை தந்தது அங்கிருந்தவர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. மேலும், அவர்கள் ஜெகன் மோகன் ரெட்டியுடன் நலம் விசாரித்து உரையாடிய புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

   

https://twitter.com/jeba_of/status/2118356439211344013/video/1

   

விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகரான விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவின் வருகை ஊடகங்களிலும் இணையத்திலும் பேசுபொருளாகியுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த நிகழ்வு, சென்னை வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.