எலான் மஸ்க் இழந்த டிரில்லினியர் பட்டம்…உலகையே அதிரவைத்த சரிவு… எலான் மஸ்க்குக்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளியினர்… 2 நாட்களில் நடந்த அதிரடி மாற்றம்…!

By Visaka on ஆனி 26, 2026

Spread the love

உலகின் முன்னணி தொழிலதிபரும், பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், சமீபத்தில் 1.32 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டியதன் மூலம் உலகின் முதல் டிரில்லினியர் என்ற பெருமையைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதன்பின்னர், அவரது விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு பங்குச்சந்தையில் கடுமையாக சரிந்ததால், அவரது சொத்து மதிப்பில் 363 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக அவரது மொத்த சொத்து மதிப்பு 957 பில்லியன் டாலராகக் குறைந்ததால், டிரில்லினியர் என்ற அந்தஸ்தை அவர் இழந்தார்.

இருப்பினும், உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை எலான் மஸ்க் தொடர்ந்து தக்கவைத்துள்ளார். தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு மற்றும் மின்சார வாகனத் துறைகளில் அவரது நிறுவனங்கள் உலகளவில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், சொத்து மதிப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும் அவர் முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

   

மறுபுறம், உலகளவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான ஷங்க் மித்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். Welltower நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள அவர், ஓராண்டுக்கு 821 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹7,769 கோடி) ஊதியம் பெறுவதாக அமெரிக்காவின் The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல் உலக தொழில்துறை மற்றும் நிறுவன நிர்வாக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.