மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த இறைச்சிக் கடைக்காரர் சதீஷ் மற்றும் பழக்கடை நடத்தி வரும் சஜித் ஆகிய இரு நண்பர்களுக்கு மண்ணுக்குள் புதைந்திருந்த வைரம் மூலம் பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. வறுமையில் வாடி வந்த இவர்கள், விடாமுயற்சியுடன் வைரச் சுரங்கத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துத் தேடி வந்த நிலையில், சுமார் 15.34 காரட் எடையுள்ள உயர்தர வைரம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 60 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், அந்த ஏழை நண்பர்களின் வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது.
பல தலைமுறைகளாக இவர்களது குடும்பத்தினர் வைரத்தைத் தேடி வந்தும் கிடைக்காத நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த பொக்கிஷம் அந்த ஊர் மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரம் விரைவில் அரசு மூலம் ஏலம் விடப்பட உள்ளது. அதில் கிடைக்கும் பெரும் தொகையைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எதிர்பாராத இந்த வருமானத்தைக் கொண்டு நிலம் வாங்குவதோ அல்லது தொழிலைப் பெருக்குவதோ இவர்களது முதல் நோக்கம் அல்ல என்பதுதான் இதில் நெகிழ்ச்சியான விஷயம்.
தங்களுக்குக் கிடைக்கவுள்ள பணத்தைக் கொண்டு, தங்களது சகோதரிகளுக்குச் சிறப்பான முறையில் திருமணம் செய்து வைக்கப்போவதாக அந்த நண்பர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ஏழ்மை நிலையிலும் குடும்பப் பொறுப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் இவர்களது குணம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…
தமிழக வெற்றிக் கழகத்தில் "தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு..." சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி... தவெகவில்…
பொதுவாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக 10…
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிவா மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் சேர்ந்து, 40 வயதுடைய பெண்…
சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…
மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…