போலந்து நாட்டின் ரொக்ளா (Wrocław) உயிரியல் பூங்காவில், சுமார் 13 கிலோ எடை கொண்ட சிறிய முண்ட்சாக் (Muntjac) வகை ஆண் மான் ஒனறு, தன்னை விட 130 மடங்கு பெரிய, அதாவது 1.7 டன் எடையுள்ள ‘மருஸ்கா’ (Maruśka) என்ற பெண் காண்டாமிருகத்துடன் மோதுவது போன்ற வீடியோ 2026 ஜனவரி 9 அன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. பனி படர்ந்த அந்தப் பூங்காவில், குட்டி மான் எவ்வித அச்சமுமின்றி காண்டாமிருகத்தை முட்டித் தள்ள முயற்சிப்பதையும், பின் தொடர்ந்து துரத்துவதையும் மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
இந்த வினோதமான நடவடிக்கைக்கு அந்த மானின் உடலில் சுரக்கும் ‘டெஸ்டோஸ்டிரோன்’ (Testosterone) ஹார்மோன் அதிகரிப்பே காரணம் என உயிரியல் பூங்கா அதிகாரிகள் விளக்கியுள்ளனர். அதன் இணையின் இனப்பெருக்கக் காலம் என்பதால், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இது போன்ற செயல்களில் அந்த மான் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அசுர பலம் கொண்ட காண்டாமிருகம் அந்த மானைத் தாக்காமல், மிகவும் பொறுமையுடனும் விளையாடும் மனநிலையுடனும் இருந்ததாகப் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பொறுப்பேற்று ஒரு வாரத்திற்கு மேலாகியும், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்னும் ஒதுக்கீடு…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்துள்ள நிலையில், முதல் ஒரு வாரத்திலேயே பல்வேறு…
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைமையிலான அரசு வெற்றி…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலும் வெற்றி…
தமிழக அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் ஆடை அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறப் போவதாக காங்கிரஸ்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, மே 10, 2026 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது…